10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு


10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 3 July 2023 11:53 PM IST (Updated: 4 July 2023 2:07 PM IST)
t-max-icont-min-icon

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் வழங்கினார்.

ராணிப்பேட்டை

தக்கோலம்,

தக்கோலம் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தக்கோலம் பேரூராட்சி சார்பில் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், வார்டு உறுப்பினருமான முகமது காசிம் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் கோமளா ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் எஸ்.நாகராஜன் கலந்து கொண்டு பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவிகள் லோ.புவனா- 545, எஸ்.ரம்யா -535, த.கவிதா- 521 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் தெ.பிரவீணா-443, பி.ஜோஷினி- 432, எஸ்.நந்தினி- 423 ஆகிய மாணவிகளை பாராட்டி பரிசு பொருள் மற்றும் ரொக்க பரிசு வழங்கி பேசினார்.

அப்போது வாழ்க்கையில் வெற்றிப்பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். போராடினால் தான் வெற்றி பெற முடியும். எனவே நீங்கள் அனைவரும் பெற்றோர்களுக்கும், பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் மேற்படிப்புகளை படித்து பல துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும். என்றார். வார்டு உறுப்பினர்கள் பாண்டியன், தயாளன், கோபி, சிவசங்கரி, சாகிரா பானு ஆகியோரும் மாணவிகளை வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி மாணவி தமிழ் செல்வி நன்றி கூறினார்.


Next Story