பசுமை சாம்பியன் விருது- ரூ.1 லட்சம் பரிசு


பசுமை சாம்பியன் விருது- ரூ.1 லட்சம் பரிசு
x
தினத்தந்தி 6 Jun 2023 12:45 AM IST (Updated: 6 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு தொகையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசு தொகையை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 46 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 39 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 30 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 58, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 24 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 28 மனுக்களும் என்று மொத்தம் 225 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

பசுமை சாம்பியன் விருது

முன்னதாக சுற்றுச்சூழல் சீர்கேட்டினை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டினை ஏற்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமை சாம்பியன் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசை, ஏ.வி.சி. பொறியியல் கல்லூரிக்கும், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமாருக்கும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் அலுவலர்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்ஒளி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நரேந்திரன், ஜெயபாலன், மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story