காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு பரிசுத்தொகையினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு பரிசுத்தொகையினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஏ.சரத்கமல் மற்றும் ஜி.சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் சவ்ரவ் கோஷல் மற்றும் தீபிகா பல்லிக்கல், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற செல்வி பவானி தேவி மற்றும் இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சரத் கமலுக்கு ரூ.1.8 கோடி, சத்யனுக்கு ரூ.1 கோடி, சவுரவ் கோசலுக்கு ரூ.40 லட்சம், தீபிகா பல்லிகலுக்கு ரூ.20 லட்சம், பயிற்றுனர்களுக்கு ரூ.51 லட்சம், பவானி தேவிக்கு ரூ.35 லட்சம், பிரனவ் வெங்கடேஷ்க்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீரர்களின் பயிற்றுநர்களுக்கு ரூ. 51 இலட்சத்திற்கான .காசோலைகளை அவர் வழங்கினார்.

Related Tags :
Next Story