மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு


மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு
x

மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

திருச்சி

14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள செயற்கை புல்தரை மைதானத்தில் நடந்தது. ஆக்கி திருச்சி சார்பில் நடந்த இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று காலை நடந்தது. இந்த ஆட்டத்தில் காஜாமியான் பள்ளியும், ஆர்.சி. பள்ளியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய காஜாமியான் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சுங்கத்துறை கண்காணிப்பாளர் கருணாகரன், ஆக்கி திருச்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினர். இதில் முன்னாள் வீரர்கள் பாலகிருஷ்ணன், செந்தில்குமார், பிரமிளா மற்றும் வீரர்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story