கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சங்கரன்கோவிலில் கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெண்களுக்கான கபடி போட்டி நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 18 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இதில் குற்றாலம் பராசக்தி கல்லூரி அணி முதலிடமும், சேரன்மாதேவி ஏ.வி.எஸ். கபடி குழு 2-வது இடமும், ஆலங்குளம் காலத்திமடம் அணி 3-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, ரொக்க பரிசுகளை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, இளைஞர் அணி சரவணன், மாணவரணி கார்த்தி, உதயகுமார், மாவட்ட உடற்கல்வி இயக்குனர் நாராயணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் சங்கர், கேபிள்கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






