மாணவ-மாணவிகளுக்கு பரிசு


மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் குர்ஆன் போட்டியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை அஹமது தெரு பொதுநல சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அல் மதரசத்துல் மனார் மக்தப் மதரசாவின் சிறுவர்களுக்கான நோன்பு காலங்களில் குர்ஆனை முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அஹமது தெரு பொதுநல சங்க தலைவர் ஏ.சுல்தான் தலைமை தாங்கினார்..விழாவில் சிறப்பு விருந்தினராக புதுப்பள்ளி ஆலிம் முகமது மன்சூர் நூரி ஆலிம் கலந்து கொண்டார்.

விழாவில் மதரசா தலைமை ஆலிம் நியமத்துல்லா முன்னிலை வகித்தார்.அஹமது தெரு பொது நல சங்கத்தின் செயலாளர் நைனா முகமது, சங்கத்தின் உறுப்பினர்கள் ஏரோ இபுனு, ஹாஜா நஜிமுதீன், ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.கபார்கான் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்யது இபுராகிம், சதக் ஆசாத் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். குர்ஆன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை அஸ்வான் அமீரக தலைவர் ஹமீது கான், கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை டைம்ஸ் உரிமையாளர் ஹமீது யாசின், 14- வது வார்டு கவுன்சிலர் சுஐபு ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

1 More update

Related Tags :
Next Story