போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தென்காசி

புளியங்குடி:

தென்காசி மாவட்ட வாசிப்பு இயக்கம், புளியங்குடி அரசு நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய அண்ணா பிறந்தநாள் விழா போட்டிகளின் பரிசளிப்பு விழா புளியங்குடி மெயின் பஜார் நகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் முத்துச்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகநாத பெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.

விழாவில் அண்ணா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாசுதேவநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, புளியங்குடி நூலகர் முத்துமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் மீனாட்சி சுந்தரம் செய்திருந்தார். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியை பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

1 More update

Next Story