வால்பாறையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள்


வால்பாறையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள்

கோயம்புத்தூர்

வால்பாறை

ஒருங்கிணைந்த உலக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு வால்பாறை பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயண் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கீர்த்திவாசன் அறிவுரையின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு போலீசார் சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் கற்பகம் போலீசாருடன் சென்று பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், தங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story