போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு


போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு
x

போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் பாலகன் சரஸ்வதி அம்மாள் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி, முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.

கல்லூரி மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற்றது. பேச்சு போட்டியில் முதல் பரிசு மஞ்சுவும், இரண்டாம் பரிசு விஜீட்டா மார்க்ரெட்டும், கட்டுரை போட்டியில் முதல் பரிசு வர்ஷாவும், இரண்டாம் பரிசு பிரபாவும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். மருத்துவ துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஜெயசித்ரா சிறப்புரையாற்றினார். சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story