துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x

துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி

திருச்சி:

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபிள் கிளப்பில் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், உடற்பயிற்சி கூடமும் உள்ளது. இந்த கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளுக்கு ஏர்-ரைபிள் பயிற்சிக்கான கோடை கால சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் 12 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான 2-வது பேட்ஜ் கடந்த 15-ந் தேதி முதல் நடைபெற்றது. முகாமையொட்டி நடத்தப்பட்ட 10 மீட்டர் ஏர்-ரைபிள் போட்டியில் 90 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவி நிறைமொழி முதல் இடத்தையும், மாணவர் கண்பத்தர்ஷனா 2-வது இடத்தையும், மாணவர் அஸ்வந்த் 3-வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story