கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x

பாளையங்கோட்டை அருகே கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை தெற்கு ஒன்றியம் புதுக்குளத்தில் சக்தி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை என்.கணேசராஜா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கினார். பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான சி.முத்துக்குட்டி பாண்டியன் 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கினார். 3-ம் பரிசாக மாவட்ட ஓட்டுனர் அணி மாவட்டச் செயலாளர் மகாராஜேந்திரன் ரூ.15 ஆயிரம் வழங்கினார். 4-ம் பரிசாக முன்னாள் அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன் ரூ.10 ஆயிரம் வழங்கினார். ஏற்பாடுகளை வீரளப்பெருஞ்செல்வி மற்றும் புதுக்குளம் சக்தி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பினர் செய்திருந்தனர்.


Next Story