கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
முக்கூடலில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முக்கூடல்:
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த ஆலடிபட்டி அணிக்கு ரூ.7 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த முக்கூடல் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 4-வது இடம் பிடித்த சிங்கம்பாறை அணிக்கு ரூ.3 ஆயிரமும், 5-வது இடம் பிடித்த வள்ளியூர் அணிக்கு ரூ.2 ஆயிரமும், 6-வது இடம் பிடித்த நாசரேத் அணிக்கு ரூ.1,000-ம் பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு பரிசுகளை வழங்கினார். சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இளவட்டக்கல் தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற இளைஞர்கள் இளவட்டக்கல்லை தூக்கி திறமையை வெளிப்படுத்தினர்.
விழாவில் சிவப்பிரகாசம், வக்கீல் ராமநாதன், மதுரை நாடார் மகாஜன சங்க நிர்வாக குழு உறுப்பினர் காமராஜ், பாப்பாக்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாரிவண்ணமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் முருகேசன், காளிமுத்து, குகன்ராஜ், ஆனந்தராஜ், சேவல்மகேஷ், ராகவன், சுரேஷ் செய்து இருந்தனர்.