முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 பேருக்கு பரிசு: கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 பேருக்கு பரிசு: கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 1:49 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற 1,187 பேருக்கு பரிசுகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு, கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசுகையில் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்-அமைச்சா் கோப்பைக்கான போட்டிகள் 5 பிரிவின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் 28-ந்தேதி வரைக்கும் நடைபெற்றது.

இதில், பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 பேர், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 பேர், பொதுபிரிவில் 227 பேர், அரசு ஊழியர்கள் பிரிவில் 182 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 பேர் என மொத்தம் 1,187 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் முதல் பரிசாக 406 பேருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சத்து 18 ஆயிரமும், 2-ம் பரிசாக 403 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக 378 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் என்று மொத்தம் 1,187 பேருக்கு ரூ. 24 லட்சத்து 2 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story