கவிதை, கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

தமிழ்வளர்ச்சிதுறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கவிதை மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் உமா பரிசு வழங்கினார்.
கவிதை போட்டிகள்
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்குரிய மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.
கவிதைப்போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ இரண்டாம் பரிசும், காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் விஷ்வா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பரிசு
இதேபோல் கட்டுரைப்போட்டியில் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா முதல் பரிசும், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தீபிகா இரண்டாம் பரிசும், நல்லூர் கிறிஸ்து அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மெர்லின் லக்ஸிதா மூன்றாவது பரிசும் பெற்றனர்.
பேச்சுப்போட்டியில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிஷா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரோஸ்லி இரண்டாம் பரிசும், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் சபரிநாதன் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் உமா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






