பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்ற பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டிகளில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசாக 2 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி மாவட்ட பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, தனித்துணை கலெக்டர் திருப்பதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story