பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

வேலூர்

வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அம்பேத்கர் மற்றும் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1,2 மற்றும் 8, 9-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி, கல்லூரி பிரிவில் முதல் 3 இடம் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாலதி, ராஜ்குமார் (நிலஎடுப்பு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

இதில் வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story