வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு


வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு
x

வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெரம்பலூர்

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற மத்திய அரசு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட சாரணர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தனியார் பள்ளிகள் கல்வி அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், சிறந்த பள்ளிகளுக்கும், பள்ளிகளில் மாணவிகளை அதிகளவு சேர்த்த தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கேடயங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முன்னதாக மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் குழந்தைராஜன் வரவேற்றார். முடிவில் இடைநிலை பள்ளி துணை ஆய்வாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

1 More update

Next Story