கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குவதற்கு நடைமுறைகள்


கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குவதற்கு நடைமுறைகள்
x

கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவித்து உள்ளார்

கோயம்புத்தூர்

கோவை

கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் அறிவித்து உள்ளார்.

கட்டிட அனுமதி

கோவை மாநகராட்சியில் தற்போது 5 லட்சம் குடியிருப்புகள் உள்ளன.

இதுதவிர வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் மாநக ராட்சி பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழுதடைந்த கட்டிடங்களை புனரமைப்பதற்கும் அனுமதி கோரி பொதுமக்கள் மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கின்றனர்.

அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி அளிப்பது குறித்த நடைமுறை கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கள ஆய்வு

மாநகராட்சி வார்டு பணிகளை மேற்கொள்ளும் உதவி அல்லது இளம் பொறியாளர்கள் கட்டிட அனுமதி, மனைப்பிரிவு, மனை வரன்முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மனுதாரர்களின் விண் ணப்பங்களில் வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் கட்டண தொகை செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கட்டிட அனுமதி வழங்கப்பட்ட பிறகு கட்டுமான பணிகள் ஒவ்வொரு நிலையிலும் வரைபட ஒப்புதலின்படி கட்டப்படு கிறதா? என கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

விதிமீறல் கட்டுமானம்

மேலும் மாநகர் பகுதியில் அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டு மானங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தந்த வார்டுகளில் மியாவாக்கி முறையில் அடர்வனம், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாந கராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், அதை உடனே அகற்ற வேண்டும்.

அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுவதுடன், நகரமைப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் அனைத்து வித மனுக்களுக்கு பதிலுரை வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) கோப்புகளை பரிசீலித்து ஆய்வு செய்து அறிக்கை சமர் பிப்பதுடன், அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை கண்டறிந்து நோட்டீஸ் வழங்கி அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதி ஒப்புதல்

உதவி செயற்பொறியாளர்கள் தயார் செய்து அனுப்பும் ஆய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பணியை செயற்பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டிட அனுமதி வழங்கும் கோப்புக ளில் 4 ஆயிரம் சதுரடி வரை உள்ள குடியிருப்பு தொடர்பான கோப்பின் இறுதி ஒப்புதலுக்கு துணை ஆணையாளருக்கும், 4 ஆயி ரம் சதுர அடிக்கு மேல் என்றால் ஆணையாளருக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story