தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு செயல்விளக்கம்


தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு செயல்விளக்கம்
x

நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில் பேரிடர் மீட்பு குறித்த செயல் விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலை அலுவலர் ராஜா, சிறப்பு நிலை அலுவவலர் சந்தோஷம் தலைமையிலான தீயணைப்பு படையினர் கலந்து கொண்டு, மழை பாதிப்பு, நில நடுக்கம், தீ விபத்து ஆகியவைகளில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாப்பது, உயிரிழப்பு நிகழாமல் எளிதில் காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தனி தாசில்தார் லட்சுமி, தலைமையிடத்து துணை தாசில்தார் மாதேஷ், மண்டல துணை தாசில்தார் காமராஜ் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story