விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
இயற்கை உரங்கள் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி மற்றும் திருவேட்டநல்லூர் கிராமத்தில் முன்னோடி விவசாயி பொன்குட்டி பாண்டியன் எலுமிச்சை தோட்டத்தில் பிரதம மந்திரியின் செழுமை மையம் திட்டத்தின் கீழ் அங்கக உர பயன்பாடு மற்றும் செயல்விளக்கத்தை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டி லைசர்ஸ் லிட் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் பயன்படுத்துவது சம்பந்தமாக செயல்முறை விளக்கம், விழிப்புணர்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் வட்டார வேளாண்மை இயக்குனர் திருச்செல்வம், வட்டார வேளாண்மை அலுவலர் மா.சுரேஷ், திருேவட்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சுதா சங்கராராயணன், கவுன்சிலர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பஷிர் அகமது, கோவிந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.