சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தர்மபுரி

மொரப்பூர்:

கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சங்கர் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துணை தலைவர் சென்றிலா சிலுவைநாதன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் பள்ளி வளாகத்தை தூய்மை செய்து மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உஜ்ஜீவன் ஸ்மால் வங்கி கிளை மேலாளர் ஜீவா ராஜேந்திரன், தூய்மை பணியாளர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story