உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரியில் உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
உலக மருந்தாளுனர் தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பரண்டு வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சில்லறை வணிக மருந்தாளுனர்கள், அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் மற்றும் பார்மசி கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளுடன் 4 ரோடு, பைபாஸ் ரோடு வழியாக அரசு மருத்துவக்கல்லூரியை சென்றடைந்தனர். அங்கு உலக மருந்தாளுனர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அமுதவல்லி, தர்மபுரி மருந்து ஆய்வாளர் சந்திராமேரி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் ராம் பிரபு மற்றும் தனியார் பார்மசி கல்லூரி முதல்வர்கள், பார்மசி துறையின் சிறப்பம்சங்கள் குறித்தும், பார்மசி படித்தால் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி பேசினர். இதனை தொடர்ந்து மருந்தாளுனர்கள் 50 பேர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த வங்கியில் ரத்ததானம் கொடுத்தனர்.