இருசக்கர வாகன ஊர்வலம்


இருசக்கர வாகன ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் சூசன்பெட்ரியியா, மாநில துணைச்செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் தானப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றார். தமிழ்நாடு அரசு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் நாராயணன், மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் தங்கதுரை, ஜெகதீசன், ராஜேஸ்குமார், கார்த்திக்ராஜா, ஈஸ்வரி, மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாதப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, காந்தி சிலை வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது. அப்போது பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story