தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்குபால்குடம் எடுத்து செவ்வாடை பக்தர்கள் ஊர்வலம்


தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்குபால்குடம் எடுத்து செவ்வாடை பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2023 12:15 AM IST (Updated: 12 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு செவ்வாடை பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கள்ளக்குறிச்சி

ஆடி திருவிழா

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி திருவிழாவின்போது கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் இருந்து செவ்வாடை அணிந்த பக்தர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணியளவில் கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் இருந்து தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சக்தி கரகம் அழைத்தல் மற்றும் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

பால்குட ஊர்வலம்

இதில் 250-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் செவ்வாடை அணிந்து கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையிலிருந்து கச்சேரி சாலை, துருகம் சாலை, பெருங்கூர் வழியாக தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது பக்தர்கள் சிலர் அம்மன் மற்றும் காளி வேடம் அணிந்து நடனம் ஆடியபடி கோவிலை சென்றடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story