வேளாண்மை துறை சார்பில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி


வேளாண்மை துறை சார்பில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் வேளாண்மை துறை சார்பில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள ஊர் மேலழகியான் வேளாண் அறிவியல் மையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி மேளா நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கினார். பழனி நாடார் எம்.எல்.ஏ., கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள், வேலாயுதபுரம் பஞ்சாயத்து தலைவர் வேல்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்து ராஜா வரவேற்றார். 8 அரங்குகளில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள், முன்னோடி விவசாயிகள், பூலாங்குடியிருப்பு எம்.கே.பி.பள்ளி மாணவ-மாணவிகள், தென்காசி கீழப்புலியூர் இந்து மேல்நிலைப் பள்ளியின் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வேளாண் விஞ்ஞானி தங்கப்பாண்டியன், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் சுகுமார், இளவரசன், பாலசுப்பிரமணியன், திருமலைச்செல்வி ஆகியோர் பேசினார்கள். வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான கிளாங்காடு பகுதி விவசாயிகளுக்கு மானியத்தில் தென்னங்கன்றுகளும், கடையநல்லூர் வட்டார விவசாயிகளுக்கு நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி விதைகளும் மானியத்தில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் கிருஷ்ணகுமார், தென்காசி உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, விவசாய சங்க தலைவர் செல்லத்துரை, செங்கோட்டை முன்னோடி விவசாயிகள் சங்கர சுப்பிரமணியன் ஸ்ரீராம், முத்து சிவன் உள்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் அட்சயா, உதவி விதை அலுவலர்கள் முருகன், குமரேசன், திருப்பதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் கருப்பசாமி, ராமநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.



Next Story