சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி


சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி
x

சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் உள்ள சில ஆலைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் சில ஆலைகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

சுகாதார ஆய்வாளர் பாண்டியராஜன் தலைமையில் சென்ற குழுவினர் சிவகாசி- விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஆலையில் ஆய்வு செய்தனர்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

அப்போது அங்கு பிளாஸ்டிக் இலைகள் மற்றும் டீ கப்புகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இதுகுறித்து கமிஷனர் சங்கரன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரின் உத்தரவின் பேரில் ஆலை நிர்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த வேல்முருகன் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், பிளாஸ்டிக் பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்த கன்னிச்சேரியை சேர்ந்த முருகன் என்பவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அதிகாரி பாண்டியராஜன் தெரிவித்தார்.


Next Story