மதுரையில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் அதிரடி கைது
மதுரையில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
திருப்பரங்குன்றம்
மதுரையில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
மதுரையை சேர்ந்த 42 வயதான கல்லூரி பேராசிரியை ஒருவர் ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் ெகாடுத்தார். அதில், தன்னுடன் பணியாற்றி வரும் ஒரு பேராசிரியர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கல்லூரி பேராசிரியர் கைது
விசாரணையில், அந்த பேராசிரியை பணியாற்றும் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த எழுமலை செல்லையாபுரத்தைச் சேர்ந்த ரகுபதி (44) பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது. இதனையடுத்து ரகுபதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story