பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்


பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

நெல்லை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பேட்டை:

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையை அடுத்த பழையபேட்டை கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அலுவலர் சங்கத்தினர் மண்டல தலைவர் ஜெயபால் தனசிங், தேசிய செயலாளர் மகாராஜன், மண்டல செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து மாலையில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு (மூட்டா) ஆசிரியர் சங்க தலைவர்கள் ஐசக் அருள்தாஸ், ஹெய்ஸ்தாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணைத் தலைவர் நசீர் அகமது, துணை பொது செயலாளர் கலைவாணன், அலுவலர் சங்க மண்டல செயலாளர் கணேசன் ஆகியோர் விளக்கி பேசினார்கள். தொடர்ந்து கல்லூரி அலுவலர்கள் இரவில் இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராஜஜெயசேகர் உட்பட பேராசிரியர்கள், பேராசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story