குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா


குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில்  கலைத்திருவிழா
x
நாமக்கல்

குமாரபாளையம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் கலைத்திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியை கவுசல்யா மணி, பெற்றோர் பள்ளி மேலாண்மைக் குழு முதன்மை பார்வையாளர் பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மேகலா, நகராட்சி உறுப்பினர்கள் சியாமள செந்தில்குமார், பரிமளம் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஈஸ்வரன், விஜயகுமார், பள்ளி மேலான்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story