சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது
சிவகங்கை
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்த தமிழ் கனவு நிகழ்ச்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியினர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டும், சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைகளாகிய கல்லூரி மாணவர்களுக்கு உணா்த்துவது என்பது எதிர்கால சமூக கட்டமைப்பின் முக்கிய பகுதியாகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரிகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டையகால தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி, கல்விப்புரட்சி மற்றும் அதன் திட்டங்கள், அதனை செயல்படுத்தும் முறைகள் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு, இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.