கடுவனூா் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


கடுவனூா் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x

கடுவனூா் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்,

வாணாபுரம் அடுத்த கடுவனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ரிஷிவந்தியம் ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கி, 69 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் அமிர்தம் ராஜேந்திரன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பச்சமுத்து வரவேற்றார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜேந்திரன், நிர்வாகிகள் செல்வம், பிரபு, குப்புசாமி, விஜயகுமார், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எடுத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.


Next Story