காசோலைகளில் கையெழுத்திடும் கூட்டுறவு சங்கத்தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை


காசோலைகளில் கையெழுத்திடும் கூட்டுறவு சங்கத்தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை
x

காேசாலைகளில் கையெழுத்து போடும் கூட்டுறவு சங்கத்தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மதுரை

காேசாலைகளில் கையெழுத்து போடும் கூட்டுறவு சங்கத்தலைவர்களின் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொடக்கக்கூட்டுறவு வேளாண்மை சங்கத்தின் தலைவர் சங்கரபாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த மார்ச் மாதம் கூட்டுறவு பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், அதன் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் இதர பணப்பரிமாற்றம் செய்வதற்கு காசோலை வழங்கப்படும். இந்த கூட்டுறவு சங்கங்களின் பணப்பரிவர்த்தனைக்கு சங்கங்களின் தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கையில், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் கூட்டுறவு கடன் சங்கத்தலைவர்கள் கையெழுத்து போட்டு கொடுக்கப்படும் காசோலைகளை பணப்பரிவர்த்தனைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

இடைக்கால தடை

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆஜராகி, பதிவாளரின் சுற்றறிக்கையானது, தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டவிதிகளுக்கு எதிரானது. கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரம் வேண்டுமென்றே பறிக்கப்பட்டுள்ளது என வாதாடினார். விசாரணை முடிவில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்து கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.


Related Tags :
Next Story