நள்ளிரவு 1 மணிக்கு மேல்பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை


நள்ளிரவு 1 மணிக்கு மேல்பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை
x

நாமக்கல் நகரில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

கொண்டாட்டத்திற்கு தடை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு அன்று நாமக்கல் உட்கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனம் பறிமுதல் செய்யப்படும். 20 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். நகர் முழுவதும் 10 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதன்மூலம் அதிவேகமாக வாகனம் ஓட்டும் நபர்கள் கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும்.

பைக்ரேஸ்

பைக்ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணான 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தலங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இரவு முழுவதும் கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story