ரூ.4½ கோடியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு


ரூ.4½ கோடியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
x

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4½ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரூ.4½ கோடியில் பணிகள்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4½ கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மேல்பட்டி ஊராட்சியில் சி.எப்.எஸ்.ஐ.டி.எஸ் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்தில் பள்ளி கட்டிடம், ரூ.5 லட்சத்தில் சமையலறை, 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரத்தில் மகளிர் சுகாதார வளாகம் பழுதுபார்த்தல், செண்டத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 43 ஆயிரத்தில் சமையறை மற்றும் ரூ.2 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்த்தல், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 32 ஆயிரத்தில் பள்ளி கட்டிடம், பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்தில் சிமெண்டு சாலை ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

கார்க்கூர் ஊராட்சியில் சி.எப்.எஸ்.ஐ.டி.எஸ். திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்தில் பள்ளி கட்டிடம், சாத்கர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு உயர் நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சத்தில் சைக்கிள் ஷெட், ரூ.12லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ.5½ லட்சத்தில் கழிப்பறை, எஸ்.சி.பி.ஏ.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 47 லட்சத்தில் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.

திட்ட இயக்குனர் ஆய்வு

இந்த பணிகளை திட்ட இயக்குனர் ஆர்த்தி பார்வையிட்டு, சாலையின் அளவு, தரம் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், ஒன்றிய பொறியாளர் பிரமிளா, பணி மேற்பார்வையாளர்கள் கணேஷ்பாபு, ஹேமாவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story