வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
மாமண்டூர், சிறுகரும்பூர் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
காவேரிப்பாக்கத்தை அடுத்த மாமண்டூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அமிர்த சர்வே திட்டத்தில் புதிய குளம் அமைய உள்ள பகுதியையும் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தார். பின்னர் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை, பைப் லைன் அமைத்தல், புதிய போர் வெல் அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பள்ளிக்கு சென்று தூய்மை பணிகளையும் பார்வையிட்டு, தலைமை ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பள்ளி வாளாகத்தில் காய்கறி செடிகளை பயிரிட ஊராட்சி மன்ற தலைவரிடம் ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறுகறும்பூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பரசு, பாலாஜி, ஊராட்சிமன்ற தலைவர்கள் சுலோச்சனா பிரகாஷ், தமிழ்செல்வி குணசேகரன், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.