வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம்
தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
திட்டச்சேரி:
தமிழகத்திலேயே முதல் முறையாக நாகை மாவட்டத்தில், வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் முதல் முறை...
வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் மட்டும் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலேயே முதல்முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் நாகை மாவட்டத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை கிராமத்தில் நடந்த விழாவில் 14 வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.தனியார் நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இதுவரை 65 பேர் பதிவு செய்துள்ளனர்.இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் தனியார் கியாஸ் நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
---------