வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில்ரூ.12 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கருப்பூர்
ஓமலூர் ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி நெருஞ்சிப்பட்டி பகுதியில் 120 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா, ரூ.9 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை, மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.3 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்ககப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு டேபிள், பெஞ்ச், பீரோ உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. வெள்ளக்கல்பட்டி ஊராட்சி தலைவர் கே.கே.கண்ணன் வரவேற்றார். ஓமலூர் ஒன்றிய செயலாளர் செல்வக்குமரன், மாவட்ட கவுன்சிலர்கள் அழகிரி, சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்கள் லலிதா, அருள் பாலாஜி, கோபால்சாமி, மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாநில செயற்குழு உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி தலைவர் அருண் பிரசன்னா. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குடிநீர் தொட்டிக்கு பூமிபூஜை, பள்ளிக்கு உபகரணங்கள், நடமாடும் ரேஷன் கடை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மனோகரன், ஊராட்சி துணைத் தலைவர் ராஜா, கிளை செயலாளர் பாலு, சக்திவேல், மகேந்திரன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் நாகன் நன்றி கூறினார்.