கிருஷ்ணகிரியில்ரூ.63.78 லட்சத்தில் திட்ட பணிகள்நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில்ரூ.63.78 லட்சத்தில் திட்ட பணிகள்நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
x

கிருஷ்ணகிரியில் ரூ.63.78 லட்சத்தில் நலத்திட்ட பணிகளை நகராட்சி தலைவர் பரிதாதொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு, கோட்டை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. இதையடுத்து 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில், இப்பகுதியில் இருந்த பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததால், புதிய நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, 13 தெருக்களுக்கு குழாய்கள் மூலமும், தெருக்களில் சின்டெக்ஸ் தொட்டி அமைத்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி தி.மு.க., நகர செயலாளர் நவாப், கோட்டை ஷாகி மஜீத் தலைவர் முஸ்தாக் அகமது, செயலாளர் மிட்டாதர், கனல் சுப்பிரமணி, வட்ட பிரதிநிதி லட்சுமி, ஷரினா, ஜெயந்தி, ஜாபர், சர்தார், சரவணன், மைனுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, 4-வது வார்டு ஆசிப்நகரில் ரூ.19 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா மற்றும் சந்தைப்பேட்டை அருகில் உள்ள காய்கறி அங்காடி அருகே ரூ.36.28 லட்சம் மதிப்பில் பொது கழிவறை கட்டிடம் உள்ளிட்டவற்றையும் நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் வசந்தி, கவுன்சிலர்கள் ஜெயக்குமார், மத்தீன், பிரதோஷ்கான், தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story