ரூ.19.17 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அனுமந்தபுரம் ஊராட்சியில் ரூ.19.17 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தர்மபுரி
காரிமங்கலம்
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் முஸ்லிம் தெருவில் மயான சுற்றுச்சுவர், கழிவுநீர் கால்வாய் ஆகிய பணிகள் ரூ.19.17 லட்சம் மதிப்பில் மேற்ெகாள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி பாஸ்கர், துணைத்தலைவர் தீபாசுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பங்கேற்று பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story