வருவாய்துறையில் பணியாற்றும் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


வருவாய்துறையில் பணியாற்றும் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2023 12:31 PM IST (Updated: 23 July 2023 12:49 PM IST)
t-max-icont-min-icon

வருவாய்துறையில் பணியாற்றும் 110 வட்டாட்சியர்களை துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புரை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஆணையின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 2004ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணைகளின்படி, தற்போது வட்டாட்சியர்களாகப் பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022ஆம் அண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியல்களுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







Next Story