19 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றனர்.
தமிழகத்தில் 232 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஜமால், களக்காடு ஜோசப் ஜெட்சன், தாழையூத்து பத்மநாபபிள்ளை, விஜயநாராயணம் அசோகன், நெல்லை சிறப்பு குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், மனோகரன், நெல்லை மாவட்ட சைபர் கிரைம் ராஜ், நெல்லை மாநகர குற்றப்பிரிவு திருப்பதி, நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் ஆகியோரும்,
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வடபாகம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபால், பசுவந்தனை சுதேசன், மணியாச்சி கோவிந்தன், தூத்துக்குடி சைபர் கிரைம் சிவசங்கரன், முத்தையாபுரம் ஜெயசீலன், தூத்துக்குடி மத்தியபாகம் ஜெயபிரகாஷ், தூத்துக்குடி தெற்கு குற்றப்பிரிவு மூக்கன், கயத்தாறு முத்து ஆகியோரும்,
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் விஜயகுமார், வாசுதேவநல்லூர் சண்முகசுந்தரம் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.