3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு


3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
x

3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட வருவாய் அலகில் கீழ்க்கண்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தாசில்தாரராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர், அதன்படி கலெக்டர் அலுவலக ஐ பிரிவு தலைமை உதவியாளர் விஜிமாரி, சாத்தூர் சிப்காட் நில எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலக ஆ பிரிவு தலைமை உதவியாளர் லட்சம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கலால் உதவிஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் திருப்பதி பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிவகாசி கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலக ஆய மேற்பார்வை அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.


Next Story