நகராட்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு
நகராட்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா நகராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களில் 22, 2-ம் நிலை அலுவலர்களை 1ஏ நிலை அலுவலர்களாகவும், 10 1 ஏ நிலை அலுவலர்களை முதல் நிலை அலுவலர்களாகவும் பதவிஉயர்வு செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் விருதுநகர் நகராட்சியில் 2-ம் நிலை மேலாளராக பணியாற்றும் மல்லிகா, விருதுநகர் நகராட்சியில் 1ஏ நிலை மேலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேேபால ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்காளராக பணியாற்றும் காளியம்மாள் 1ஏ நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு ராஜபாளையம் நகராட்சியில் முதல்நிலை கணக்கராக நியமனம் பெற்றுள்ளார். மேலும் ராஜபாளையம் நகராட்சியில் 1ஏ நிலை மேலாளராக பணியாற்றும் மகேஸ்வரன் பதவி உயர்வு அளிக்கப்பட்டு ராஜபாளையம் நகராட்சியில் முதல் நிலை மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.