குறைகளை சுட்டிக்காட்டினால் உடனுக்குடன் நடவடிக்கை
குறைகளை சுட்டிக்காட்டினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
பீளமேடு
குறைகளை சுட்டிக்காட்டினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
கூட்டுறவு வார விழா
கோவை கொடிசியாவில் 69-வது கூட்டுறவு வார விழா நடை பெற்றது. விழாவிற்கு கூட்டுறவு துறை மற்றும் நுகர்வோர் பாது காப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். விழாவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு கொடியேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கண்காட்சி யை பார்வையிட்டு, கூட்டுறவு வார விழா மலரை வெளியிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்த குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் மாதவன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தரமான அரிசி
இந்திய அளவில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகளும் லாபத்தில் இயங்க கூடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் 6,900 கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. அவற்றை சொந்த கட்டிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். கூட்டுறவு துறையில் 6 ஆயிரம் பேரை நியமிக்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்து உள்ளார். இதுவரை விவசாயிகளுக்கு ரூ.7,300 கோடி கடன் வழங்கி உள்ளோம்.
கொரோனா காலத்தில் 99.9 சதவீத ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கினோம். யாரும் பணம் கிடைக்க வில்லை என்று புகார் கூறவில்லை. கூட்டுறவு துறை மூலம் தரமான அரிசி வழங்கப்படுகிறது.
உடனுக்குடன் நடவடிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரேஷன் அரிசி கடத் தல் தடுக்கப்பட்டு உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 13 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேவைப்ப டும் இடங்களில் புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும்.
இந்தியாவிலேயே ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. கடந்த 1½ ஆண்டுகளாக ரேஷன் கடைகளுக்கு தேவையான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் குறைகள் இல்லை. சுட்டி காட்டினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.