உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை


உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை
x

உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை

நாகப்பட்டினம்

உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என திருமருகல் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் ராதாகிருட்டிணன் தெரிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

இதன் விவரம் வருமாறு:-

சரவணன் (தி.மு.க.): பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு மற்றும் உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களையும் கண்காணிக்க வேண்டும்.

இளஞ்செழியன் (தி.மு.க): ஒன்றிய பகுதிகளில் கதண்டுகள் தாக்குவதை தடுக்க தீயணைப்புத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மட்டுமே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய நேரத்தில் அதற்கான நிதி செல்கிறதா? என்பதை ஆய்வு செய்ய தவறுகின்றனர். மேலும் பணிகள் நடைபெற உரிய நேரத்தில் நிதி செல்லாததால் அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஒப்பந்தக்காரர்கள் பணிகளை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் ஒன்றியத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

உடனடியாக நடவடிக்கை

சுல்தான் ஆரிப் (தி.மு.க.): மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் நன்றி கூறினார்.


Next Story