விவசாய சங்கத்தினர் நடைபயண பிரசாரம்


விவசாய சங்கத்தினர் நடைபயண பிரசாரம்
x

பாலக்கோட்டில் 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நடைபயண பிரசாரம் மேற்கொண்டனர்.

தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோடு பஸ் நிலையம் முன்பு 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் வட்ட செயலாளர் முருகன் தலைமையில் நடைபயண பிரசார இயக்கம் மேற்கொண்டனர். இதில் மல்லுப்பட்டி முதல் பிக்கனஅள்ளி, சூடப்பட்டி, எண்டப்பட்டி, பாலக்கோடு பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது நிரந்தர வேலை வாய்ப்பு, சம ஊதியம், மாதந்தோறும் பென்சன், விவசாய கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story