ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரசார கூட்டம்


ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரசார கூட்டம்
x

வேலூரில் ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைந்து பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் ரத யாத்திரை தொடங்கப்பட்டது. இந்த ரதம் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, நேற்று வேலூருக்கு வந்தடைந்தது.

இதனை ஆசிரியர் சங்கத்தினர் வரவேற்றனர். மேலும் வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்க கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கீதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குப்புராமன் வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர் ரெங்கராஜன், அகில இந்திய ஆசிரியர் கூட்டனி பொருளாளர் ஹரிகோவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். பானுரேகா நன்றி கூறினார். இந்த ரத யாத்திரை அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி புதுடெல்லியில் முடிவடைவதாக நிர்வாகிகள் கூறினர்.


Next Story