மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதை முறையாக அமல்படுத்துங்கள்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதை முறையாக அமல்படுத்துங்கள்- தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதை முறையாக அமல்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதை முறையாக அமல்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வரி விலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அங்கப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய புதிய மாருதி காரை பதிவு செய்து, நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னுடைய புதிய காருக்கு வரி விலக்கு அளிக்கும்படி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கு துரதிஷ்டவசமானது. மனுதாரர் 80 சதவீத மாற்றுத்திறனாளி ஆவார். மனுதாரர் வர்த்தக பிரிவில் பட்டம் பெற்று உள்ளார். தேசிய செஸ் விளையாட்டிலும் நம் நாட்டிற்காக விளையாடி உள்ளார். செஸ் பயிற்சியாளராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். தற்போது அவரது தந்தை முதியவர் என்பதால் புதிதாக கார் வாங்கி, அதில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்து உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது 1976-ம் ஆண்டிலேயே தமிழக அரசு சில முடிவுகளை எடுத்தது. அதன்படி, புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து அலுவலரிடம் மனுதாரர் வரிவிலக்கு கோரியுள்ளார்.

நடைமுறைப்படுத்த வேண்டும்

ஆனால் அந்த அதிகாரி, மனுதாரர் வாகனத்தை இயக்க முடியும் என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க கேட்டுள்ளார். அது தேவையில்லை. மனுதாரர் வாகனத்தை பதிவு செய்து தர வேண்டும். அவருடைய காருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு வரி விலக்கு வழங்கும் விதிகளை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story