சொத்து பிரச்சினை: லாரியால் மோதி தொழில் அதிபரை கொலை செய்த மகன் உள்பட 2 பேர் கைது


கரூர் அருகே சொத்து பிரச்சினையால் லாரியால் மோதி தொழில் அதிபரை கொலை செய்த மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

சொத்து பிரச்சினை

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 57). தொழில் அதிபர். இவர், கதிரடிக்கும் எந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது மகன் மோகனசுந்தரம் (30). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தாந்தோணிமலை தென்றல் நகரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், தங்கராஜின் மனைவி ஜெயலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவும், சொத்து பிரச்சினை தொடர்பாகவும், தங்கராஜிக்கும், மோகனசுந்தரத்திற்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

லாரியை ஏற்றிக்கொலை

இதனால் தங்கராைஜ கொலை செய்ய மோகனசுந்தரம், தனது மாமா உறவின் முறையில் இருக்கும் மகாசாமி (45) என்பவருடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் கொறவப்பட்டி-தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்த தங்கராஜை தண்ணீர் டேங்கர் லாரியின் மூலம் மோதி தூக்கி வீசி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மோகனசுந்தரம், மகாசாமி ஆகிய இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

மகன் உள்பட 2 பேர் கைது

இதையடுத்து மோகனசுந்தரம், தனது மனைவியுடன் தங்கராஜ் இறப்புக்கு ஒன்றும் தெரியாதவர்போல் கொறவப்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின்பேரில் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, கொலைக்கு பயன்படுத்திய டேங்கர் லாரியின் நம்பர் பிளேட் பாகம் கீழே கிடந்துள்ளது. அந்த நம்பரை வைத்து போலீசார் சோதனை செய்து பார்த்ததில் மோகனசுந்தரம் தான் தங்கராஜை லாரியால் மோதி கொைல செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, மோகனசுந்தரம் மற்றும் மகாசாமியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story