மோசடி செய்த வாலிபர் மீது வழக்குபதிவு
மோசடி செய்த வாலிபர் மீது வழக்குபதிவு
பொள்ளாச்சி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தமிழ்செல்வி. இவரது செல்போனை தொடர்பு கொண்டு ஒருவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதாகவும், தனிநபர் கடனுதவி கொடுக்க 3 தவணையாக பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ரூ.12,200 பெற்றதாக தெரிகிறது. ஆனால் பணம் கொடுத்தும் கடனுதவி கிடைக்காததால் இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள வங்கியில் புகார் கொடுத்தார்.
அவர்கள் தமிழ்செல்வி பணம் செலுத்திய வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சி கிளையில் பராமரிக்கப்பட்டு வரும் காளிதாஸ் (வயது 32) என்பவரின் வங்கி கணக்கு என்பது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி வங்கி கிளை மேலாளர் ஜே.எம். 1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.